श्रीवेदान्तदेशिकस्तोत्रपञ्चरत्नम् – தமிழ் மூலமும் பொருளும்




श्रीवेदान्तदेशिकस्तोत्रपञ्चरत्नम्

ஶ்ரீவேதாந்ததேசிகஸ்தோத்ரபஞ்சரத்னம் -தமிழ் மூலமும் பொருளும்

ஶ்ரீநிகமாந்தமஹாதேஶிகன் அருளிச்செய்த இருபத்து எட்டு

 ஸ்தோத்திரபாடங்களின் பெயர்களை தெரிவிக்கும் வகையாக இந்த ஸ்துதி 

அடியேனால் இயற்றப்பட்டுள்ளது.


स्तवं हयाननस्य वै दशावतारसंस्तुतिं

समाधियोगकारिकामभीतये तथा स्तवम् ।

परश्शतं दयाकृते द्विपाद्रिराच्छतार्धकम्

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ १ ॥

ஸ்தவம் ஹயானனஸ்ய வை த3ஶாவதாரஸம்ஸ்துதிம்

ஸமாதி4யோக3காரிகாம் அபீ4தயே ததா2 ஸ்தவம் ।

பரஶ்ஶதம் த3யாக்ருதே த்3விபாத்3ரிராச்ச2தார்த4கம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 ப4ஜே ஹி தத்பத3ம் ॥ 1 ॥

பொருள்: எந்த ஆசாரியர் (ய: தே3ஶிக:) ஹயக்ரீவஸ்தோத்திரத்தையும் (ஹயானனஸ்ய ஸ்தவம் – ஹய – குதிரை, ஆநநம் - முகம்) தஶாவதாரஸ்தோத்திரத்தையும் (த3ஶாவதாரஸம்ஸ்துதிம்), பகவத்த்யாந ஸோபானத்தையும் (ஸமாதி4யோக3காரிகாம் – பகவானை த்யானம் செய்யும் முறையை கற்பிக்கும் ஸ்துதி), அபீதிஸ்தவத்தையும் (அபீ4தயே ததா2 ஸ்தவம் – அபீதயே – பயம் நீங்குவதற்காக) தயாஶதகமும் (பரஶ்ஶதம் த3யாக்ருதே - தயையைமுன்னிட்டு நூற்றுக்கும் அதிகமான ஸ்துதி), வரதராஜபஞ்சாஶத்தையும் (த்3விபாத்3ரிராச்ச2தார்த4கம் – த்விப – யானை, அத்ரி – மலை, ராட் – ராஜா அல்லது பொலிந்துவிளங்கும், ஶதார்தகம் – நூற்றில் பாதி – பஞ்சாஶத்) அருளிச்செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (ப4ஜே ஹி தத்பத3ம்). ।। 1 ।।

विरागभावपञ्चकं प्रपत्तिमार्गदीपिकां

यथोक्तकारिसंस्कृतिं गजेन्द्रमोक्षदस्तुतिम् ।

यथेष्टवासिगीतिकां स्तुतिं च पारमार्थिकां

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ २ ॥

விராக3பா4வபஞ்சகம் ப்ரபத்திமார்க3தீ3பிகாம்

யதோ2க்தகாரிஸம்ஸ்க்ருதிம் க3ஜேந்த்3ரமோக்ஷத3ஸ்துதிம் ।

யதே2ஷ்டவாஸிகீ3திகாம் ஸ்துதிம் ச பாரமார்தி2காம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 ப4ஜே ஹி தத்பத3ம் ॥ 2 ॥

பொருள்:   எந்த ஆசாரியர் (ய: தே3ஶிக:) வைராக்ய பஞ்சகத்தையும் (விராக3பா4வபஞ்சகம் – விராக3த்தினுடைய பா4வம் - வைராக்யம்), ஶரணாகதிதீபிகையையும் (ப்ரபத்திமார்க3தீ3பிகாம் - ப்ரபத்தி மார்கம் - ஶரணாகதி), வேகாஸேதுஸ்தோத்திரத்தையும் (யதோ2க்தகாரிஸம்ஸ்க்ருதிம் – யதோக்தகாரி – சொன்ன வண்ணம்செய்தபெருமாள் – வேகாஸேது எம்பெருமான்), அஷ்டபுஜாஷ்டகத்தையும் (க3ஜேந்த்3ரமோக்ஷத3ஸ்துதிம் – கஜேந்திரனுக்கு மோக்ஷம் அருள எட்டு திருக்கரங்களைக்கொண்ட எம்பெருமானைப் பற்றிய ஸ்துதி), காமாஸிகாஷ்டகமும் (யதே2ஷ்டவாஸிகீ3திகாம் - யதே2ஷ்டவாஸி – காமாஸிகா – வேளிருக்கை, கீ3திகாம் – ஸ்துதியை) பரமார்த்தஸ்துதியையும் (ஸ்துதிம் ச பாரமார்தி2காம்) அருளிச்செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (ப4ஜே ஹி தத்பத3ம்). ।। 2 ।।

सुराधिपाय चार्धकं शतं तथाच्युताय वै

असंस्कृते सुसंस्कृतं स्तवं यथेष्टसिद्धये ।

स्तुतिं च गद्यरूपिकां महाकुटुम्बिवैभवम्

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ ३ ॥

ஸுராதி4பாய சார்த4கம் ஶதம் ததா2ச்யுதாய வை

அஸம்ஸ்க்ருதே ஸுஸம்ஸ்க்ருதம் ஸ்தவம் யதே2ஷ்டஸித்3த4யே ।

ஸ்துதிம் ச க3த்யரூபிகாம் மஹாகுடு1ம்பி3வைப4வம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 ப4ஜே ஹி தத்பத3ம் ॥ 3 ॥

பொருள்:   எந்த ஆசாரியர் (ய: தே3ஶிக:) தேவநாயகபஞ்சாசத்தையும், (ஸுராதி4பாய சார்த4கம் ஶதம் - ஸுராதி4பாய – தேவநாயகனுக்கு அர்த4கம் ஶதம் – பஞ்சாசத்), அச்யுதஶதகத்தையும் (ததா2ச்யுதாய வை – அப்படியே அச்யுதனுக்கு, அஸம்ஸ்க்ருதே – ப்ராக்ருத பாஷையில், ஸுஸம்ஸ்க்ருதம் ஸ்தவம் – மிக அற்புதமான ஸ்துதியை, யதே2ஷ்டஸித்3த4யே – வேண்டின பலனை அடைய), மஹாவீர வைபவத்தையும் (ஸ்துதிம் ச க3த்யரூபிகாம் – உரைநடையில், மஹாகுடு1ம்பி3வைப4வம் – ராமாயக்ருஹமேதிநே என்று பலஸ்துதியில் ஸ்வாமி சாதித்தாற்போல், பெரியகுடும்பஸ்தனான ராமனுடைய வைபவத்தை) அருளிச்செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (ப4ஜே ஹி தத்பத3ம்). ।। 3 ।।

अहीरविंशतिं स्तुतिं सदेहलीशसंस्तुतिम्

श्रियस्स्तुतिं भुवस्तथा पुनस्तदंशवन्दिकाम् ।

प्रपत्तिविस्तृतिस्तुतिं त्रिधा सुदर्शनाष्टकम्

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ ४ ॥

அஹீரவிம்ஶதிம் ஸ்துதிம் ஸதே3ஹளீஶஸம்ஸ்துதிம்

ஶ்ரியஸ்ஸ்துதிம் பு4வஸ்ததா2 புநஸ்தத3ம்ஶவந்தி3காம் ।

ப்ரபத்திவிஸ்த்ருதிஸ்துதிம் த்ரிதா4 ஸுத3ர்ஶனாஷ்டகம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 ப4ஜே ஹி தத்பத3ம் ॥ 4 ॥

பொருள்:   எந்த ஆசாரியர் (ய: தே3ஶிக:) கோபாலவிம்ஶதியை (அஹீரவிம்ஶதிம் ஸ்துதிம் – அஹீர - கோபால), தேஹளீஶ ஸ்துதியையும் (ஸதே3ஹளீஶஸம்ஸ்துதிம்), ஶ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதாஸ்துதிகளையும் (ஶ்ரியஸ் - ஶ்ரீயினுடைய, ஸ்துதிம் பு4வஸ் – பூதேவினுடைய, ததா2 – அப்படியே, புநஸ் – மறுபடியும், தத3ம்ஶ - அவளுடைய அம்ஶமான கோதாவினுடைய - வந்தி3காம் - ஸ்துதியை), ந்யாஸதஶகம், ந்யாஸவிம்ஶதி மற்றும் ந்யாஸதிலகம் என்கிற மூன்று ஸ்துதிகளையும் (ப்ரபத்திவிஸ்த்ருதிஸ்துதிம் த்ரிதா4 – ப்ரபத்தி – சரணாகதி – அதைப்பற்றி விஸ்தாரமாக மூன்று ஸ்துதிகளில் சாதித்துள்ளார்), ஸுத3ர்ஶனாஷ்டகத்தையும் (ஸுத3ர்ஶனாஷ்டகம்) அருளிச்செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (ப4ஜே ஹி தத்பத3ம்). ।। 4 ।।

सुदर्शनस्य षोडशायुधस्तुतिं महौषधिम्

गरुत्मतश्च दण्डकं शतार्धकं स्तवं तथा ।

यतीन्द्रगीतिसप्ततिं गुरौ सुभक्तिदर्शिकाम्

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ ५ ॥

ஸுத3ர்ஶனஸ்ய ஷோட3ஶாயுத4ஸ்துதிம் மஹௌஷதி4ம்

கருத்மதஶ்ச த3ண்ட3கம் ஶதார்த4கம் ஸ்தவம் ததா2 ।

யதீந்த்3ரகீ3திஸப்ததிம் கு3ரௌ ஸுப4க்தித3ர்ஶிகாம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 ப4ஜே ஹி தத்பத3ம் ॥ 5 ॥


பொருள்:   எந்த ஆசாரியர் (ய: தே3ஶிக:) ஷோடஶாயுத ஸ்தோத்திரத்தை (ஸுத3ர்ஶனஸ்ய ஷோட3ஶாயுத4ஸ்துதிம் மஹௌஷதி4ம் – சக்கரத்தாழ்வாருடைய பதினாறு ஆயுதங்களைப் பற்றிய நோய்களுக்கு மேலான மருந்தான ஸ்துதியை) கருட தண்டகத்தையும், கருடபஞ்சாஶத்தையும் (கருத்மதஶ்ச த3ண்ட3கம் ஶதார்த4கம் ஸ்தவம் ததா2 - கருத்மதஶ்ச – கருடனைப் பற்றிய தண்டகமும்,  ஶதார்த4கம் - ஶதம் – நூறு, அர்த4கம் – பாதி – பஞ்சாசத், ஐம்பது), யதிராஜஸப்ததியையும் (யதீந்த்3ரகீ3திஸப்ததிம் – யதீந்த்3ர – யதிராஜ, கீ3தி – ஸ்துதி, கு3ரௌ ஸுப4க்தித3ர்ஶிகாம் – குருவினிடத்தில் சீரிய பக்தியை எடுத்துக்காட்டும்), அருளிச் செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (ப4ஜே ஹி தத்பத3ம்). ।। 5 ।।

नकुलेन विधेयेन मुकुन्दपद्मनाभयोः ।

सर्वतन्त्रस्वतन्त्राय स्तुतिरियं समर्पिता ॥

நகுலேன விதே4யேந முகுந்த3பத்மநாப4யோ: ।

ஸர்வதந்த்ரஸ்வதந்த்ராய ஸ்துதிரியம் ஸமர்பிதா ॥

பொருள்: நகுலனாலஂ (நகுலேன) தாஸனால் (விதே4யேந) முகுந்தன் மற்றும் பத்மநாபன் என்னும் குருமார்களுடைய (முகுந்த3பத்மநாப4யோ:) நிகமாந்த மஹாதேஶிகனுக்கு (ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய) ஶ்ரீவேதாந்ததேசிக ஸ்தோத்ர பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்துதி (ஸ்துதிரியம்) ஸமர்ப்பிக்கப்பட்டது (ஸமர்பிதா) ॥

நகுலன் (எ) முகுந்தபத்மநாபதாஸன்


॥ ஶுபம் பூயாத் ॥


Comments

Popular posts from this blog

My humble pranams in the form of verses in Sanskrit, to Dr.S.Padmanabhan, my Guru, on his Sashtyabdapurti , 60th birthday on 24-09-2017

श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलिः

Poetry on animals, birds and insects - part 3