My humble pranams in the form of verses in Sanskrit, to Dr.S.Padmanabhan, my Guru, on his Sashtyabdapurti , 60th birthday on 24-09-2017



श्रीः

नकुलेन मुकुन्दपद्मनाभदासेन विरचिते नकुलस्य सुघोषे
आचार्यगौरवप्रतिपादिकास्तुतिः

श्रीमते पद्मनाभाय नमः

हेमलम्बे नभस्ये यो विशाखायामजायत ।
षष्ट्यब्दपूर्तिरद्येह गुरोरस्य प्रगण्यते ।। 1 ।।

ஹேமலம்பே நபஸ்யே யோ விஶாகாயாமஜாயத​ |
ஷஷ்ட்யப்தபூர்த்திரத்யேஹ​ குரோரஸ்ய​ ப்ரகண்யதே  ||  1  ||

The 60th birthday is being celebrated here, today (24-09-2017), of the Guru whose birth star is Vishaka of Bhadrapada month in Hemalamba year. (1)

          ஹேமலம்ப வருடத்தில், புரட்டாசி விசாகத்திருநாளில் அவதரித்த இந்த ஆசார்யருடைய அறுபதாவது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் இன்று கொண்டாடப்படுகிறது! (1)

नाम्ना च पद्मनाभोयं वृत्तिः पद्मस्थनीरवत् ।
विख्यातिलाभपूजासु विमुखो वैष्णवोत्तमः ।। 2 ।।

நாம்நா ச​ பத்மநாபோயம் வ்ருத்தி: பத்மஸ்தநீரவத் |
விக்யாதிலாபபூஜாஸு விமுகோ வைஷ்ணவோத்தம​: ||  2  ||

Padmanabha is his name, his conduct is like water on the lotus leaf (detached attachment, the lotus connection in both) in all. An excellent Srivaishnava he is, disinterested in fame, gain and stuti. (2)

பத்மநாபன் என்ற திருநாமம் கொண்ட இவரது செயல்பாடும் தாமரை இலைத்தண்ணீரை ஒத்தது (இரண்டிலும் தாமரை ஸம்பந்தம்). புகழ், ஆதாயம், முகஸ்துதிகளில் ஆசையின்றியும் உள்ள இவர், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சிறந்த உதாஹரணம் ஆவார். (2)

भगवतो गुरोश्चापि नाम्नापि जन्मनापि यः ।
सम्बन्धी श्रीनिवासस्य देशिकस्य सुतं भजे ।। 3 ।।

பகவதோ குரோஶ்சாபி நாம்நாபி ஜந்மநாபி ய​: |
ஸம்பந்தீ ஸ்ரீநிவாஸஸ்ய​ தேஶிகஸ்ய ஸுதம் பஜே  || 3 ||

(His father’s name is Sri.Srinivasa Desikan, the two parts of his name linked to Lord Srinivasa and Vedanta Desika respectively. He was born on Bhadrapada month in sravana nakshatra which is common to both mentioned above). I salute that son of Srinivasa Desika (Sri Padmanabhan) who has a sambandha to Bhagavan and Acharya by name and birth. (3)

            ஸ்ரீநிவாஸதேஶிகருடைய திருக்குமாரருக்கு என் வந்தனம். ஸ்ரீநிவாஸதேஶிகர் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண​ நக்ஷத்திரத்தில். எனவே பெயராலும், அவதார​தினத்தாலும் எம்பெருமானோடும், ஆசாரியனோடும் ஸம்பந்தம் பெற்றவராகிறார்.  (3) 
                        
श्रीनिवासप्रसादेन सरोजानाभिजो ह्ययम् ।
तद्गुणपूरितो नूनं पितुःपुत्रो न संशयः ।। 4 ।।

ஸ்ரீநிவாஸப்ரஸாதேந​ ஸரோஜாநாபிஜோ ஹ்யயம் |
தத்குண​பூரிதோ நூநம் பிது:புத்ரோ ந​ ஸம்ஶய​:  || 4 ||

He is indeed the ideal son of an ideal father born to Smt.Saroja, with the grace of Lord Srinivasa, possessing all his attributes. (4)

ஸ்ரீநிவாஸபெருமானது அருளால், அதே பெயருடைய தந்தைக்கும், திருமதி ஸரோஜா என்னும் அன்னைக்கும் பிறந்த இவர், அவரது குணங்களால் தந்தைக்கேற்ற பிள்ளையாக விளங்குபவரன்றோ! (4)

मद्रपुर्याः प्रसिद्धस्य विश्वविद्यालयस्य वै ।
अध्यक्षोयं विभागस्य संस्कृतस्य सुसंस्कृतः ।। 5 ।।

மத்ரபுர்யா: ப்ரஸித்தஸ்ய​ விஶ்வவித்யாலயஸ்ய​ வை |
அத்யக்ஷோயம் விபாகஸ்ய​ ஸம்ஸ்க்ருதஸ்ய​ ஸுஸம்ஸ்க்ருத​: ||  5  ||

He, a well cultured person, is the head of the department of Sanskrit of the famous University of Madras. (5)
            பண்பாடு மிகுந்த இவர், சென்னைப்பல்கலைக்  கழகத்தின் ஸமஸ்க்ருதத் துறையின் தலைமைப் பேராசிரியராக விளங்குகிறார்.           (5)

संस्कृतं च मनो यस्य वागपि संस्कृता तथा ।

संस्कृतानि च कार्याणि तं संस्कृतगुरुं भजे ।। 6 ।।

ஸம்ஸ்க்ருதம் ச​ மநோ யஸ்ய​ வாகபி ஸம்ஸ்க்ருதா ததா |

ஸம்ஸ்க்ருதாநி ச​ கார்யாணி தம் ஸம்ஸ்க்ருதகுரும் பஜே | 6 |

I salute that Guru of Sanskrit whose mind, words and action are all refined. (6)

எவருடைய எண்ணம், சொல், செயல் மூன்றும் பக்குவப்பட்டு விளங்குகின்றனவோ, அப்படிப்பட்ட வடமொழி ஆசிரியரை வணங்குகிறேன் (6)

श्रिया सहितकार्योयं तयैव युक्तसन्निधौ ।  

तत्पतेः प्रतिपत्त्या हि पदमलंकरोति तत् ।। 7 ।।

ஶ்ரியா ஸஹிதகார்யோயம் தயைவ​ யுக்த ஸந்நிதௌ  |

தத்பதே: ப்ரதிபத்த்யா ஹி பதம் அலம்கரோதி தத்  ||  7  ||

He decorates the post of Srikaryam in the Sri Sannidhi (Srimad Ahobila mutt) with deep reverence to its Jeer and the Lord. (7)

ஸ்ரீமடம் என்று கொண்டாடப்படும் அஹோபில மடத்தில், மடாதிபதியான அழகியசிங்கரிடமும், ஶ்ரிய:பதியான எம்பெருமானிடமும் மிகவும் சிரத்தை கொண்டவராக​, ஶ்ரீகார்யம் என்கிற பதவியை அலங்கரிக்கிறார். (7)

निजकुलप्रदीपं च गुरुगुरुप्रकाशकम् ।

पितृवत्पुत्रकं नूनं नमामि तं गुरूत्तमम् ।। 8 ।।

நிஜகுலப்ரதீபம் ச​ குருகுருப்ரகாஶகம் |

பித்ருவத்புத்ரகம் நூநம் நமாமி தம் குரூத்தமம்  ||  8  ||

I salute that excellent Guru who is a torch bearer of his own kula, the best torch bearer of his Gurus (their fame), and who is just like his father (in both appearance and conduct). (8)
          தன் குலத்தினுடைய குலவிளக்காகவும் தனது ஆசாரியர்களின் (புகழினுடைய) ஒளிவிளக்காகவும் திகழ்பவரும், தன் தந்தையை ஒத்த உருவமும் நன்னடத்தையும் கொண்டவருமான​ ஆசிரியரோத்தமரை வணங்குகிறேன். (8)

प्रतिपदं निजाचार्यान् स्मरन्नेव प्रवर्तते ।

जीवने पाठने यस्तं प्रतिपद्ये सदा तथा ।। 9 ।।

ப்ரதிபதம் நிஜாசார்யான் ஸ்மரந்நேவ​ ப்ரவர்த்ததே  |

ஜீவநே பாடநே யஸ்தம் ​ப்ரதிபத்யே ஸதா ததா  ||  9  ||

          I resort to that teacher who remembers his acharyas at every word while teaching and at every step in the journey of life. (9)

          நித்ய நடைமுறையிலும், பாடம் கற்பிக்குமளவிலும், தனது ஆசாரியப்பெருமக்களை, அனவரதமும், ஒவ்வொரு பதத்திலும் (அடியிலும்) முறையே சிந்தித்த வண்ணம் இருக்கும், அந்த ஆசிரியரை அவ்வண்ணமே அடிபணிகிறேன். (9)

शास्त्रं काव्यायते यस्मिन् काव्यं गीतायते भृशम् ।
अकर्कशायते तर्कः तं वन्दे गुरुपुंगवम् ।। 10 ।।

ஶாஸ்த்ரம் காவ்யாயதே யஸ்மிந் காவ்யம் கீதாயதேப்ருஶம்
அகர்க்கஶாயதே தர்க்க​: தம் வந்தே குருபுங்கவம் || 10  ||

I salute that best of teachers in whose teaching sastras sound like kavyas, kavyas like songs and Tarka mellows down for easy understanding excessively. (10)

          அவர் பயில்விக்கும் ஶாஸ்திர பாடங்கள் காவியம் போன்று எளிமையாகும். காவியங்களோ என்னில், கீதம் போன்று இனிமையாகும். தருக்கம் என்னும் கடினமான ஶாஸ்திரமோ மென்மைத்தன்மை பெறும். அத்தகைய தலைச்சிறந்த ஆசிரியரை வணங்குகிறேன். (10)

नेति वक्तुं न जानाति परुषं च पदं तथा ।
अतिवक्तुं च कालेस्मिन् स एव किल तत्समः ।। 11 ।।

நேதி வக்தும் ந​ ஜாநாதி பருஷம் ச​ பதம் ததா |
அதிவக்தும் ச​ காலேஸ்மிந் ஸ​ ஏவ​ கில​ தத்ஸம​:  || 11  ||

          He does not know to say no, neither to speak a harsh word nor to exaggerate; In this, in the present times, he is indeed equal to him. (11)

          "இல்லை, இயலாது" என்னும் சொல்லை அறியாதவர். கடிய சொற்கள் இவர் அகராதியில் இல்லை. மிகைப்படுத்திப்பேசவும் அறியாதவர். இவ்விஷயத்தில் இக்காலத்தில் இவருக்கு நிகர் இவரேஎன்பதில் மிகையில்லை. (11)

स्वगुरवः प्रकाश्यन्ते शिष्येणानेन धीमता ।
तथा यत्नेन शिष्याश्च तद्गौरवं महीयते ।। 12 ।।

ஸ்வகுரவ​: ப்ரகாஶ்யந்தே ஶிஷ்யேணாநேந​ தீமதா |
ததா யத்நேந​ ஶிஷ்யாஶ்ச​ தத்கௌரவம் மஹீயதே  |  12  ||

          Through him, the wise man, all his Gurus get known to the world and through his efforts his sishyas also attain fame. By this the respect for him only grows. (12)

            சீரிய அறிவுத்திறன் கொண்ட இவரால், இவருடைய குருக்களின் பெருமை உலகில் ப்ரகாஶிக்கப்படுகிறது. மேலும் இவருடைய யத்நத்தினால் இவருடைய ஶிஷ்யர்களும் ப்ரகாஶமாகிறார்கள். இவ்வாறு இவருடைய மதிப்பு மேன்மேலும் பெருகிய வண்ணம் உள்ளது. (12)

यन्मुखं मन्दहासाय करौ चांजलये तथा ।
धर्मप्रवृत्तये पादौ सदाचार्यं भजे हि तम् ।। 13 ।।

யந்முகம் மந்தஹாஸாய​ கரௌ சாஞ்ஜலயே ததா  |
தர்மப்ரவ்ருத்தயே பாதௌ ஸதாசார்யம் பஜே ஹி தம்  | 13 | 

          I salute that noble Acharya whose face sports a pleasant smile and hands salute always (to greet others) and whose legs proceed in the path of dharma only. (13)

            எப்பொழுதும் புன்முறுவல் கொண்ட முகத்தையும், வணங்கும் கைகளையும், (பிறரை வரவேற்பதில்) தர்ம மார்கத்தில் ப்ரவர்த்திக்கும் பாதங்களையும் உடைய ஸதாசாரியனை வணங்குகிறேன். (13)

विद्यया पूर्णकुम्भोयं तथापि लघुतायुतः ।
सर्वत्र पूर्णकुम्भेण वन्द्यं वन्दे सदा हि तम् ।। 14 ।।

வித்யயா பூர்ணகும்போயம் ததாபி லகுதாயுத​:  |
ஸர்வத்ர​ பூர்ணகும்பேண​ வந்த்யம் வந்தே ஸதா ஹி தம்  |14|

          He is like a vessel completely filled with knowledge yet carries himself with humility; I salute him always who is to be saluted with a purnakumbha everywhere. (14)

            “நிறைகுடம் தளும்பாது" என்னும்படி அறிவு முதிற்சியுடனும் அடக்கத்துடனும் திகழுமிவர், பூரணகும்பத்துடன் எங்கும் வரவேற்கத் தகுந்தவர். அப்படிப்பட்டவரை எப்பொழுதும் வணங்குகிறேன். (14)

ऐश्वर्यं चापि कौलीन्यं वैदग्ध्यमस्य विद्यते ।
तथापि विनयोपेतः कलिरप्यत्र विस्मितः ।। 15 ।।

ஐஶ்வர்யம் சாபி கௌலீன்யம் வைதக்த்யமஸ்ய​ வித்யதே  |
ததாபி விநயோபேத​: கலிரப்யத்ர​ விஸ்மித​:  ||  15  ||

          He possesses nobility in birth, wealth and scholarship (the three factors of pride). Yet he is very humble. In this, even the kaliyuga is surprised (that ‘there can be such a person in my time!’)
            தனம், குலம், வித்யை என்று முப்படிகளாலும் மேம்பட்டிருந்தாலும், முக்குறும்பறுத்தவர். கலிபுருடனும் கூட, “என் சமயத்தில் இப்படி ஒருவரோஎன்று வியக்கிறான். (15)

वैदिककुशलोप्येषः लौकिकनयकोविदः ।
अतप्तपरचित्तेस्मिन् को वा धरति वैरताम् ।। 16 ।।

வைதிககுஶலோப்யேஷ​: லௌகிகநயகோவித​:  |
அதப்தபரசித்தேஸ்மிந் கோ வா தரதி வைரதாம்  ||  16  ||

          He is adept in vaidika vishaya and knows how to conduct in wordly affairs. Who can be an enemy to him who does not offend others? (16)

        வைதிக மார்க்கத்தை முற்றுமறிந்தவர். ஆயினும் தேவையளவில், உலகியல் நடையிலும் பழகக் கற்றவர். ஒருவரையும் கடியசொல் சொல்லாத இவருக்கு பகை ஏது? (16)

विज्ञापने वरिष्ठेषु शिष्येष्वाज्ञापने तथा ।
यथा कार्यस्य साफल्यं वाक्पटुतास्य भासते ।। 17 ।।

விஜ்ஞாபநே வரிஷ்டேஷு ஸிஷ்யேஷ்வாஜ்ஞாபநே ததா  |
யதா கார்யஸ்ய​ ஸாபல்யம் வாக்படுதாஸ்ய​ பாஸதே  ||  17  ||

In requesting his elders and commanding his sishyas, his ability to articulate shines in getting the task done. (17)

            பெரியோரை வேண்டிப்பெறவும், மாணாக்க வர்க்கத்தை கட்டளையிடவும் உரிய வாக்கு சாதுர்யம் உடைய இவரால், செயல்கள் உரிய முறையில் நிறைவேற்றப்படுகின்றன.     (17)

द्राविडभाषया वापि संस्कृतेनापि भाषणम् ।
भाषान्तरेण चैतस्य मधुरं कर्णयोरहो ।। 18

த்ராவிடபாஷயா வாபி ஸம்ஸ்க்ருதேநாபி பாஷணம்  |
பாஷாந்தரேண​ சைதஸ்ய​ மதுரம் கர்ணயோரஹோ  ||  18  ||

His speech, be it in Tamil or Sanskrit or English, is a treat to the ears. (18)

தமிழிலோ, வடமொழியிலோ, ஆங்கிலத்திலோ, இவரது உரை செவிகளுக்கு தேன். (18)

श्रुतिभ्यो वा पुराणेभ्यः स्मृतिभ्यस्स्तुतिवर्गतः ।
द्राविडवेदजातेभ्यः प्रमाणं तत्स्मृतौ सदा ।। 19

ஶ்ருதிப்யோ வா புராணேப்ய​: ஸ்ம்ருதிப்யஸ்துதிவர்கத​:  |
த்ராவிடவேதஜாதேப்ய​: ப்ரமாணம் தத்ஸ்ம்ருதௌ ஸதா | 19 |

He quotes freely from his memory the pramana vakyas from the Vedas, Puranas, Smrtis, Stotras and Dravida Vedas. (19)

மறை என்னும் வேதம், புராணங்கள், ஸ்ம்ருதிகள், ஸந்தமிகு தமிழ்மறை, மற்றும் ஆசாரிய​ ஸ்ரீஸூக்திகளிலிருந்து, இவர் காட்டும் மேற்கோள்கள் இவருடைய​ நினைவில் எப்போதும் நிறைந்து நிற்பவை. (19)

अपृच्छतो न किञ्चिच्च यथापृष्टं तु पृच्छतः ।
अशेषं ननु पात्रस्य बोधनारीतिरस्य वै ।। 20 ।।

அப்ருச்சதோ ந​ கிஞ்சிச்ச​ யதாப்ருஷ்டம் து ப்ருச்சத​:  |
அஶேஷம் நநு பாத்ரஸ்ய​ போதநாரீதிரஸ்ய​ வை  ||  20  ||

          His teaching style is indeed such that he does not teach those who do not ask for, teaches some, only what is being asked for, but teaches completely to the deserving student. (20)
            இவருடைய பாடம் கற்பிக்கும் முறை சிறப்பானது. கேளாதவருக்குச் கற்பிக்கமாட்டார். கேட்பவருக்கு அளவுடன் கற்பிப்பார். தகுதி உள்ளவருக்கோ, அனைத்தையும் கற்பிப்பவர். (20)

प्रमेयशिक्षणे चास्य नैपुण्यस्य न मापिका ।
प्रमाणबोधने भाति सदमेयं नु कौशलम् ।। 21

ப்ரமேயஶிக்ஷணே சாஸ்ய​ நைபுண்யஸ்ய​ ந​ மாபிகா |
ப்ரமாணபோதனே பாதி ஸதமேயம் நு கௌஶலம்  ||  21  ||

In teaching the metaphysics his skill is beyond any measure. In teaching the pramanas, his talent shines without being measurable. (21)

ப்ரமேயங்களை போதிப்பதில், இவர் திறமைக்கு அளவுகோல் (ப்ரமாணம்) இல்லை. ப்ரமாணங்களை போதிப்பதில், இவர் திறமை அளப்பதற்கு (ப்ரமேயத்துக்கு) அப்பாற்பட்டதாகிறது. (21)

विद्या मास्तु विवादाय वित्तं डम्भाय नैव च ।
द्वयोरयमुदाहारः स्वकर्मणि रतस्सदा ।। 22

வித்யா மாஸ்து விவாதாய​ வித்தம் டம்பாய​ நைவ​ ச​  |
த்வயோரயமுதாஹார​: ஸ்வகர்மணி ரதஸ்ஸதா  || 22  ||

Let knowledge be not for debates (worthless) and let money be not for pomp and show – He, who is a karmayogi, is an example for the two. (22)

வீண் வாதத்திற்காக அறிவு வேண்டா. ஆடம்பரத்திற்காக செல்வம் வேண்டா. இந்த இரண்டிற்கும் கர்மயோகியான இவரே சான்று. (22)

आलस्यं नास्ति यद्देहे न चाञ्चल्यं मनस्यपि ।
अपार्थक्यं तथा वाचि नरोत्तमं भजे हि तम् ।। 23

ஆலஸ்யம் நாஸ்தி யத்தேஹே ந​ சாஞ்சல்யம் மநஸ்யபி  |
அபார்தக்யம் ததா வாசி நரோத்தமம் பஜே ஹி தம்  ||  23  ||

I salute that best of men whose body does not know laziness, whose mind does not know fickleness and whose speech does not possess indistinctness. (23)

எவருடைய​ தேஹத்தில் சோம்பல் இல்லையோ, மனதில் சஞ்சலம் இல்லையோ, சொல்லில் தெளிவின்மை இல்லையோ, அந்த​ நரோத்தமரை வணங்குகிறேன். (23)

प्रसादेन मुकुन्दस्य लब्ध एष गुरुर्मम ।
आजीवं वन्दनीयो वै सदारस्सादरं सदा ।। 24 ।।

ப்ரஸாதேந​ முகுந்தஸ்ய​ லப்த​ ஏஷ​ குருர்மம​  |
ஆஜீவம் வந்தநீயோ வை ஸதாரஸ்ஸாதரம் ஸதா  ||  24  ||

          With the grace of Mukunda (the Lord, also my other Guru’s name is Sri Mukundan whom I had met before meeting him) I have him as my Guru and he, as a dampati, is to be saluted by me always with respect in this life. (24)

            முகுந்தனுடைய (எம்பெருமான் மற்றும் அடியேனுடைய மற்றொரு குருவின் பெயரும், எவரை முதலில் சந்தித்தேனோ) தயையால், இவரை குருவாக அடையப்பெற்றேன். அடியேனால், இவர் தம்பதி ஸமேதராய் இப்பிறப்பளவும் வழிபடத் தக்கவர். (24)

श्रीभारद्वाजगोत्रस्य मुनेरस्य प्रशासनात् ।
वन्यत्वं च परित्यज्य रामोयं संस्कृतोस्ति वै ।। 25

ஸ்ரீபாரத்வாஜகோத்ரஸ்ய​ முநேரஸ்ய​ ப்ரஶாஸநாத்  |
வந்யத்வம் ச​ பரித்யஜ்ய​ ராமோயம் ஸம்ஸ்க்ருதோஸ்தி வை  ||  25  ||

(In Srimad Ramayana, Rama, who was living in the forest, was instructed by Sage Bharadwaja for his Shreyas)

By the instructions of this sage of the Bharadwaja clan (Sri Padmanabha), this Sreeram, who was naïve before, has indeed abandoned that naivety to become refined. (25)

பாரத்வாஜ​ கோத்திரத்தைச் சேர்ந்த​ இந்த​ முனிவருடைய (ஶ்ரீபத்மநாபனால்) வழிகாட்டலினால், முன்பு பக்குவமற்று இருந்த இந்த​ ஸ்ரீராமன், இப்பொழுது பக்குவப்பட்டு விளங்குகிறான்.
(இராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு பரத்வாஜமுனிவர் வழி காட்டினார்) (25)

येन सत्त्वं मया लब्धम् असत्त्वगुणिना पुरा ।
अनुत्तमरजस्तस्य पादमूलस्य वै भजे ।। 26 ।।

யேந​ ஸத்த்வம் மயா லப்தம் அஸத்த்வகுணினா புரா  |
அநுத்தம​ ரஜஸ்தஸ்ய​ பாதமூலஸ்ய​ வை பஜே ||  26  ||

          It is because of him indeed, I, who was possessed of rajas and tamas before, obtained sattva (existence). I salute the unparalleled dust of his feet. (26)

முன்பு தாமஸ-ராஜஸ குணங்களோடு மட்டும் இருந்த நான், இவரால் ஸத்தை (ஸத்த்வ குணமும்) பெற்றேன் என்பது திண்ணம். இவருடைய இணையற்ற பாத தூளிகளை நமஸ்கரிக்கிறேன். (26)

अस्खलितं पदं यस्य सम्प्रदायनये सदा ।
सदाचार्यस्य चैतस्य पन्था एषोस्तु मत्पथः ।। 27

அஸ்கலிதம்​ பதம் யஸ்ய​ ஸம்ப்ரதாயநயே ஸதா  |
ஸதாசார்யஸ்ய​ சைதஸ்ய​ பந்தா ஏஷோஸ்து மத்பத​:  ||  27  ||

Let the path of this noble acharya who treads the path of Sampradaya always in a comprehensive manner, be my path always. (27)

ஸம்பிரதாய​ மார்க்கத்தை குறைவற்று வழிநடத்தும் இந்த​ உன்னத​ ஆசாரியனுடைய வழியே அடியேனுக்கும் வழிகாட்டியாக இருக்கட்டும் (27)

यत्प्रसादेन वर्तेहं सकुलो नकुलश्च वै ।
तमहं शिरसा वन्दे वैष्णवतिलकं सदा ।। 28 ।।

யத்ப்ரஸாதேந​ வர்தேஹம் ஸகுலோ நகுலஶ்ச​ வை  |
தமஹம் ஶிரஸா வந்தே வைஷ்ணவதிலகம் ஸதா  ||  28  ||

          I salute that Guru, a Vaishnava-tilaka, by bowing down because of whose grace I can boast of a kula and I am Nakula today (the poet in me). (28)

எவருடைய​ கருணையால் நான் குலமுடையவன் என்றும், "நகுலன்" என்னும் கவியாகவும் இன்று நிலை பெறுகிறேனோ, அந்த​ வைஷ்ணவ​ திலகத்தை எப்பொழுதும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.                  (28)

हयग्रीवदयानीता ब्रह्मपत्नी मयि स्थिता ।
यया शिवा गुरोर्भूता पद्मनाभस्य संस्तुतिः ।। 29 ।।

ஹயக்ரீவதயாநீதா ப்ரஹ்மபத்நீ மயி ஸ்திதா  |
யயா ஶிவா குரோர்பூதா பத்மநாபஸ்ய​ ஸம்ஸ்துதி:  || 29  ||

          Saraswati, the power of speech, is stationed in me by the grace of Hayagreeva because of which this auspicious stuti of Sri Padmanabha is composed. (29)
வாக்கிற்கு அதிதேவதையான​ ஸரஸ்வதி தேவி, ஸ்ரீஹயக்ரீவப்பெருமானின் அருளால், அடியேனிடம் வர்த்திப்பதால், ஸ்ரீபத்மநாபனைப்பற்றிய​ இந்த​ மங்களமா​ன ஸ்துதி இயற்றப்பட்டது. (29)

अशीतेश्शतमानस्य महोत्सवः प्रकल्प्यताम् ।
आयुरारोग्यमेतस्य मालोले प्रार्थ्यते गुरोः ।। 30 ।।

அஶீதேஶ்ஶதமாநஸ்ய​ மஹோத்ஸவ​: ப்ரகல்ப்யதாம்  |
ஆயுராரோக்யமேதஸ்ய​ மாலோலே ப்ரார்த்யதே குரோ:  | 30 |
Let the 80th and 100th birthday celebrations of this Guru be celebrated in a grand manner (Let him live long) and I pray to Malola to bestow upon him long life and good health. (30)
இந்த​ மஹநீயருடைய​ ஶதாபிஷேகம் மற்றும் ஶதமான மஹோத்ஸவங்கள் விமரிசையாகக் கொண்டாடப் படட்டும். ஸ்ரீமாலோனை, இவருக்கு நீண்ட​ ஆயுளும் சிறந்த​ ஆரோக்கியமும் அருளும்படி பிரார்த்திக்கிறேன். (30)

भद्रं भूयाद्गुरोश्चापि तत्कुटुम्बस्य सर्वथा ।
शिष्यवर्गस्य शिष्येण नकुलेन मयेष्यते ।। 31 ।।

பத்ரம் பூயாத்குரோஸ்சாபி தத்குடும்பஸ்ய​ ஸர்வதா  |
ஶிஷ்யவர்கஸ்ய​ ஶிஷ்யேண​ நகுலேன​ மயேஷ்யதே  ||  31  ||

Let there be mangala to the Guru, to his family and to his disciples. It is being wished by me, Nakula, his disciple. (31)

ஆசாரியனுக்கும், அவருடைய​ குடும்பத்திற்கும், ஶிஷ்யர்களுக்கும் மங்களம் உண்டாகட்டும் என்று ஶிஷ்யனான​ நகுலனால் விரும்பப்படுகிறது. (31)

अविच्छिन्नतया भूयात् गुरोरस्य परम्परा ।
मालोलं प्रार्थये चैवम् अस्मद्गुरुपरम्पराम् ।। 32

அவிச்சின்னதயா பூயாத் குரோரஸ்ய​ பரம்பரா  |
மாலோலம் ப்ரார்த்தயே சைவம் அஸ்மத்குருபரம்பராம்  | 32 |

Let the santathi or parampara of this Guru continue in an unimpeded manner. I pray to Malola and our Guruparampara in this regard. (32)
இந்த​ குருவினுடைய​ ஸந்ததி (பரம்பரை) தடையின்றி தொடரவேணுமென்று ஸ்ரீமாலோலனையும் நமது குருபரம்பரையையும் பிரார்த்திக்கிறேன்.  (33)

पद्मनाभे मदाचार्ये गौरवप्रतिपादिका ।
स्तुतिरियं च विन्यस्ता षष्ट्यब्दपूर्तिपर्वणि ।। 33 ।।

பத்மநாபே மதாசார்யே கௌரவப்ரதிபாதிகா  |
ஸ்துதிரியம் ச​ விந்யஸ்தா ஷஷ்ட்யப்தபூர்த்திபர்வணி  || 33  ||

In the sixtieth birthday celebrations of my Guru, this stuti called ‘acharyagauravapratipadika’ is placed at his feet as a mark of expressing respect towards him. (33)

ஆசார்ய கௌரவ ப்ரதிபாதிகா என்னும் இந்த ஸ்துதி, அடியேனுடைய​ குருவின் ஷஷ்டிஅப்தபூர்த்தி மஹோத்ஸவத்தில், அவரிடத்தில் உள்ள கௌரவத்தின் அடையாளமாக​ அவருடைய​ திருவடியில் ஸமர்ப்பிக்கப்படுகிறது.
                       
नकुलेन मुकुन्दपद्मनाभदासेन विरचितेयमाचार्यगौरवप्रतिपादिकास्तुतिः समाप्ता

।। शुभं भूयात् ।।

Comments

  1. The best ever gift that can be submitted to a teacher by a student

    ReplyDelete
  2. You are the same to us. Thangalin porpadangalai vanangi adhan vazhiye thangalin acharyanai vanangugirom.

    ReplyDelete
  3. Wonderful sir. Really an amazing gift to our guru

    ReplyDelete

  4. शब्दार्थालङ्कृता
    समीचीना भवत्स्तुति:। सुहृदःपद्मनाभस्य
    प्रशंसा साधु (पा)लालिता।।
    शिष्यरत्नं भवान्नूनं
    शास्त्रं संयगधीतवान् ।
    पूजयेद्धि गुरुं धीमान्
    पद्यं तु प्रतिपादयेत् ।।
    न तु शिष्यकुलस्येयं
    सर्वेषां नःकुलस्तुतिः ।
    वैष्णवश्श्लाघितो हृद्यस्
    सुघोषो वै सुभाषितः।।

    ReplyDelete
    Replies
    1. महान्तः धन्यवादाः स्वामिन् ।

      Delete
  5. पद्मनाभः प्रसूते हि
    मुकुन्दं पद्मनाभजम्।
    सन्तत्या श्रीनिवासस्य
    समुद्धर्तुं कुलं ध्रुवम्।।
    तिरुनारायणो रङ्गात्
    ज्ञात्वा पद्यानि रम्याणि।
    पञ्चचामरवृत्तेन
    देशिकस्तोत्रमाल्यदम्।।
    आयुष्मन्तं तु संपूज्य
    संस्कृतव्यजनेन वै
    दद्यात् तस्मै च मानार्हां
    पञ्चभिश्चामरैःपङ्खाम्।।(युग्मम्)

    ReplyDelete
    Replies
    1. महान्तः धन्यवादाः स्वामिन् ।

      Delete

Post a Comment

Popular posts from this blog

श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलिः

नकुलस्य सुघोषे श्रीरामविरचिता स्तुतिः श्रीमुकुन्दमालिका