आचार्यस्तुतिपञ्चदशी सार्था - Acharyastutipanchadashi with meaning
The 63rd Thirunakshatra celebrations of the present Jeer of Sri Ahobila mutt, H.H. Sri Ranganatha Yateendra Mahadesikan (46th Srimad Azhagiyasingar) was celebrated in a grand manner on the 18th of June 2018 at Sri Ahobila mutt, Selaiyur by Sishyas with great fervour.
The Srikaryam Swami of the mutt commanded adiyen, his shishya, to compose a stuti suiting the occasion. This is indeed Acharya anugraham as there are many vidvans who are capable of composing excellent padyams.
Adiyen is still a beginner to Sanskrit poetry and is yet to transform in to a traditional poet. Ideas do not seem to be conventional but a bit modern.
Feedback is welcome on the correctness of word formations and meanings!
Dasan
Sreeram Jaganathan.
आचार्यस्तुतिपञ्चदशी
वन्दे
सुन्दरसिंहस्य तन्नाम्नश्च गुरोश्च नः ।
पादाम्बुजयुगं
गेयं स्तवने सिद्धिरस्तु मे ।। १ ।।
I salute the praiseworthy pair of divine lotus feet of the Lord
Azhagiyasingar and also of our Guru with same name, H.H.Srimad Azhagiyasingar,
let there be success in my stuti.
எம்பெருமானாகிற
அழகியசிங்கருடைய உயர்ந்த இணையடித் தாமரைகளையும், அதே திருநாமம் கொண்ட நமது ஆசார்யனுடைய
திருவடித்தாமரைகளையும் வணங்குகிறேன். அடியேனுடைய
துதி நன்கு நிறைவுபெற வேண்டும்.
कलये सततं
करुणाजलधिं
रचये स्तवनं पदयोर्विषये ।
भवतामपि
तेपि च मूर्धनि मे
कुरुतां ननु मां जगतीह
कविम् ।। २ ।।
I meditate upon the ocean of karuna, H.H.Srimad
Azhagiyasingar, and compose this stuti about his divine feet. Let them (his
divine feet) be on my head always and make me a poet in this world.
கருணைக்கடலாகிற
ஸ்ரீமதழகியசிங்கரை தியானிக்கிறேன். அவருடைய
திவ்யமான திருவடிகளைப் பற்றிய துதியையும் இயற்ற முற்படுகிறேன். அத்திருவடிகள் என்
தலைமேலனவாய் அடியேனை இப்புவியில் புலவனாக்க வேண்டும்.
मन्मथे
मिथुने चास्य मघानामकतारके ।
जन्मना
सम्प्रदायो नः शोभते लब्धवैभवः ।।
३ ।।
Our sampradaya has attained great fame due to the birth of our acharya
which is in the magha nakshatra of mithuna masa of manmatha year.
நமது
சம்பிரதாயம் நம் ஆசார்யஸார்வபௌமரின் திருவவதாரத்தால் பெரும்புகழைப் பெற்றுள்ளது.
மன்மத வருடம் மிதுன மாதம் மக நக்ஷத்திரம் கூடிய சுபதினமே அந்த நன்னாளாகும்.
चतुष्षष्टिवयो
विष्टं चतुष्षष्टिकलायुतं ।
चतुष्षष्टिकलास्वद्य चतुष्पादेन तं भजे ।। ४ ।।
I salute our Acharya on this day (his thirunakshatra) by composing stuti
(poems are called as cathushpad as they have four padas) out of the 64 art
forms, who is a master of 64 arts and who has completed 63 years of age.
64 கலைகளில் ஒன்றான பத்யம் இயற்றுதலால் 64 கலைகளில் வல்லுனரான, 64வது திருநக்ஷத்திரத்தை அடைந்துள்ள ஆசார்யனை வணங்குகிறேன்.
64 கலைகளில் ஒன்றான பத்யம் இயற்றுதலால் 64 கலைகளில் வல்லுனரான, 64வது திருநக்ஷத்திரத்தை அடைந்துள்ள ஆசார்யனை வணங்குகிறேன்.
वेदान्तदेशिकाख्यस्य यतीन्द्रस्य कृपाभवम् ।
साक्षान्नारायणाख्यस्य पदानुगं सदा भजे ।। ५ ।।
I salute our Acharya always who is a recipient of the grace of H.H.Mukkur
Azhagiyasingar, who was known as Sri Vedanta Desika Yateendra Mahadesikan and
who has followed the footsteps on H.H.Villivalam Azhagiyasingar who was known
as Sri Narayana Yateendra Mahadesikan. (The words Narayana, Yatindra and
Vedanta Desika indicate the presence of Bhagavad-Acharya krupa also in our
Acharya)
வேதாந்த தேஶிக
யதீந்த்ர மஹாதேஶிகன் எனப்படும் முக்கூர் அழகியசிங்கரின் கருணைக்குப்
பாத்திரமானவரும், ஸ்ரீநாராயண யதீந்த்ர மஹாதேஶிகன்
எனப்படும் வில்லிவலம் அழகியசிங்கரின் வழிநடப்பவரும் ஆகிற இந்த ஆசாரியனை எப்பொழுதும்
வணங்குகிறேன்.
(குறிப்பு: நாராயணன்-யதீந்த்ரன்-வேதாந்த தேஶிகன் என்னும் இப்பதங்கள்
இயல்பான பகவத்-ஆசார்ய கடாக்ஷங்களையும் காட்டும்படி உள்ளன)
वेदचूडामणिं
वन्दे श्रुत्याचारकलानिधिम् ।
वेदमूर्तिं
विशेषेण ऋचां कल्पतरुं
गुरुम् ।। ६ ।।
I salute our
Acharya who is a Vedachoodamani, a Kalanidhi of Sruti and Achara, a Veda murthi
and a Kalpataru of Rgveda. (Incidentally these are names of awards conferred on
our Acharya in his purvashrama)
வேதசூடாமணி, ஶ்ருதி-ஆசார
கலாநிதி, வேதமூர்த்தி, ரிக்வேத-கல்பதரு
(கற்பகவ்ருக்ஷம்) என்றெல்லாம் போற்றப்படும் நம் ஆசார்யனை வணங்குகிறேன். (இவை பூர்வாஶ்ரமத்தில் இவர் பெற்ற விருதுகளின் பெயர்களாகும்)
बहुभाषाप्रवीणोपि लघुभाषी तु विस्मयः ।
स्मितेन
दृष्टिपातेन शिष्याणामस्य शिक्षणम् ।। ७ ।।
It is
surprising that Our Acharya speaks less though he knows many languages and by
way of smile and meaningful glances he chides or
reprimands his disciples.
பன்மொழிகளில்
தேர்ந்தவராயினும், நம்மாசார்யன் மிதமாகவே பேசுவது வியக்கும்படி உள்ளது.
புன்சிரிப்பாலும் கடாக்ஷங்களாலுமே தம் சிஷ்யர்களை சீர்மை செய்பவர்.
निस्सौहित्यामृतेशेन सम्प्रदायाय चोत्तरम् ।
गमितो यः
सदाक्षिण्यं सदा भजे हितं हि
तम् ।। ८ ।।
I salute our
Acharya always who is a gift of Lord Aravamudan of Thirukkudanthai (Swami
Desikan hails him with the name निस्सौहित्यामृत in his Dramidopanishad Tatparya ratnavali) to our Sampradaya as a
benefactor; he has been sent to a higher position (Turiyashrama) or sent to
North (Ahobilam) (Thirukudanthai is in the south geographically) with mercy.
"நிஸ்ஸௌஹித்யாம்ருதன்"
என்று ஸ்வாமி தேஶிகனால் கொண்டாடப்பட்ட குடந்தைக்கிடந்த ஆராவமுதன் கருணை கூர்ந்து
நம் ஸம்ப்ரதாயத்திற்கு பரிசாக அருளின இந்த ஆசார்யனை எப்பொழுதும் போற்றுகிறேன்.
இங்கு 'உத்தரம்' என்னும் சொல் துரீயாஶ்ரமமான ஸந்நியாஸாஶ்ரமத்தையும், மற்றும் வடதேஶமான அஹோபிலத்தையும் குறிப்பிடுகிறது.
त्रिदण्डयुक्तहस्तोपि साम्नैव पालयत्यहो ।
त्रयी मयेति
सम्प्राप्ता सूच्यते ज्ञानमुद्रया
।। ९ ।।
Though H.H. holds the tridanda he manages everything by way of sama itself
(out of the four means called sama, dana, bheda and danda). The jnanamudra
(with three fingers unfolded) indicates that the three Vedas have been mastered
by him.
நம் ஆசார்யன் த்ரிதண்டத்தைக் கையில் ஏந்திய போதும் (சாம-தான-பேத-தண்டம் என்ற நான்கு வழிகளில் முதலாவதான) சாமத்தாலேயே அனைவரையும் வழிநடத்தி வருகிறார். இவருடைய ஞானமுத்திரையின் மூன்று நீண்ட விரல்கள் மூன்று வேதங்களைக் கற்றறிந்தவர் என்பதைக் காட்டும்.
நம் ஆசார்யன் த்ரிதண்டத்தைக் கையில் ஏந்திய போதும் (சாம-தான-பேத-தண்டம் என்ற நான்கு வழிகளில் முதலாவதான) சாமத்தாலேயே அனைவரையும் வழிநடத்தி வருகிறார். இவருடைய ஞானமுத்திரையின் மூன்று நீண்ட விரல்கள் மூன்று வேதங்களைக் கற்றறிந்தவர் என்பதைக் காட்டும்.
भावितवैदिकस्सम्यक् सम्यगाश्रितलौकिकः ।
तथा
पूजितशास्त्रज्ञः लोकाचार्यो विराजते
।। १० ।।
The Vaidikas
are done very good Sambhavana by our Acharya, and the laukikas have resorted to
him in a nice manner; The Scholars are also duly respected; All the three are
taken care of - thus is the glory of our Acharya.
நம் ஆசாரியனிடத்தில் வைதிகர்கள் வெகுவாக சன்மானம் பெறுவர்.
லௌகிகர்கள் நன்முறையில் ஆதரிக்கப்படுவர். கற்றறிந்தோர் நன்றாக கௌரவிக்கப்படுவர். இப்படி
மூவகை மக்களையும் காக்கும் வல்லமை, நம் ஆசார்யனின் தனிச்சிறப்பாகும்.
ललाटमूर्ध्वपुण्ड्रेण चक्षुश्चापि दयाम्बुना ।
मुखं
धर्मवचोभिश्च कण्ठः पवित्रमालया
।। ११ ।।
वामो
हस्तस्त्रिदण्डेन दक्षिणो
ज्ञानमुद्रया ।
वक्षश्च
ब्रह्मसूत्रेण शेषं काषायवासितम्
।। १२ ।।
पादः पुण्यरजोभिश्च यतिराजस्य राजते ।
एतस्य
शिष्यवर्गस्य भातु मूर्धनि पादुका ।। १३ ।।
These three
slokas make sense together as a unit. It describes the thirumeni of our
Acharya. The thirumeni of our acharya, the king among sannyasis, shines thus -
His forehead is decorated with urdhvapundra, eyes moisted with daya-waters,
mouth with words of dharma, neck with pavitramalas, the left hand with the
tridanda, right hand with the jnanamudra, the chest with brahmasutra, the rest covered
with Kashaya vastra, feet with the dust called punya (for devotees). Let the
paduka of such an acharya shine on the heads of his sishyavarga.
(11, 12, 13 மூன்று ஶ்லோகங்களும்
ஒன்றுசேர்ந்து ஆசார்யனின் திருமேனி வர்ணனமாக அமைந்தது).
11. "நெற்றியில்
சாற்றிய ஊர்த்வபுண்ட்ரம் எனப்படும் திருநாமம், திருக்கண்களில்
கருணை மழை, நாவில் தர்மம் உரைக்கும் மொழிகள், திருக்கழுத்தில்
பவித்ரமாலைகள்”,
12. “இடது
திருக்கரத்தில் த்ரிதண்டம், வலது திருக்கரத்தில் ஞானமுத்திரை, திருமார்பில்
ப்ரம்மசூத்ரம், அரையில் தரித்த செவ்வாடை”,
13.“ திருப்பாதங்களில் புண்ணியத்தின் வடிவான துகள்கள்"
இவ்வாறு யதிகளுக்கு அரசரான நம் ஆசார்யனுடைய திருமேனி ஒளியுடன் விளங்குகிறது.
இவ்வாசார்யருடைய பாதுகை ஶிஷ்யவர்கங்களின் ஶிரஸ்ஸை அலங்கரிப்பதாக.
भगवतो भवेद्भव्यं भागवतां सुकर्मणाम्
।
भवतां च सदाssचार्य!
सम्भवदिनपर्वणि ।। १४ ।।
O Acharya! Let there be mangala to you, our Acharya and to the Lord, and
His devotees – Bhagavatas, who perform noble deeds – this is our prayer today,
the day of your thirunakshatra vaibhavam.
ஆசார்யஶ்ரேஷ்டரே! எம்பெருமானுக்கும், (கைங்கர்யமாகிற) உயர்ந்த செயலைச் செய்யும் அடியாருக்கும், தேவரீருக்கும் எப்பொழுதும் ஸர்வ மங்களங்களும் உண்டாக வேணும். இந்த திருநக்ஷத்திர சுபதினத்தில் இதுவே யாம் வேண்டுவதாம்.
श्रीमठस्य गुरोरेवं श्रीकार्यस्य
प्रशासनात् ।
श्रीरामनामशिष्येण श्रीभ्यो नस्स्तवनं कृतम् ।। १५ ।।
By the command of
his Guru, the Srikarya of the Sri Ahobila mutt, this stuti –
Acharyastutipanchadasi, has been composed by the disciple by name Sreeram for
the prosperity of the mutt, Acharya, Srikaryam Swami and all of us.
(அடியேனுடைய)
குருவாகிற அஹோபிலமட ஸ்ரீகார்யம் ஸ்வாமியின் நியமனத்தின் பேரில் இந்த "ஆசார்ய
ஸ்துதி பஞ்சதஶீ" என்னும் துதி, ஸ்ரீராமன்
என்னும் ஶிஷ்யனால் ஸ்ரீமடம் மற்றும் அனைவருடைய ஸர்வமங்களங்களின் பொருட்டு
இயற்றப்பட்டது.
Composed by Dr.Sreeram Jaganathan, Disciple of Dr.S.Padmanabhan, Srikaryam.
Comments
Post a Comment