नकुलस्य सुघोषे श्रीरामविरचिता स्तुतिः श्रीमुकुन्दमालिका
Sri E.S.Mukundan Swami with his dharmapatni Smt.Rama
अच्युतसम्प्रदायान्मां च्युतं मुकुन्द मे गुरो ।
अरक्षदनुकम्पा ते पदमनुसराम्यहम् ॥
Mukunda! My Guru! It is indeed your
compassion that saved me when I slipped away from the acyuta sampradaya
(Acyuta’s as well as unfailing sampradaya). I follow your footsteps!
முகுந்தனே!
என் குருவே! அச்யுதஸம்பிரதாயத்திலிருந்து அடியேன் நழுவிய பொழுது உன் தயையன்றோ அடியேனைக்
காப்பாற்றியது! உன்னைப் பின்பற்றுகிறேன்.
श्रीमन्तं देवदेवं तं मुकुन्दं प्रणिपद्य मे ।
तन्नामधारिणस्स्तोत्रं कुर्वे गुरोर्यथामति ॥ १ ॥
Saluting that Sri Mukunda, the Lord of
Lords, I compose this stotra on my Guru who also bears the same name.
திருமகள் கேள்வனும்
தேவாதிதேவனுமாகிற முகுந்தனை வணங்கி, அதே திருநாமம் தரித்திருக்கும் அடியேனது குருவினுடைய இத்துதியை, மதிக்கேற்றவாறு
அடியேன் இயற்றுகிறேன்.
श्रविष्ठातारके माघे सद्वंशे
चक्रवर्तिनि ।
सञ्जातवैष्णवश्रेष्ठं
मुकुन्दाचार्यमाश्रये ।। २ ॥
I salute Acharya Mukunda, the best of
Srivaishnavas, who was born in the Avitta nakshatra of Maasi month in the
nallan chakravarti vamsa.
மாசி மாதம்
அவிட்ட நக்ஷத்திரத்தில் நல்லான் சக்ரவர்த்தி எனும் மாசில் குடிப்பிறப்பில்
அவதரித்த, ஸ்ரீவைஷ்ணவ ஶ்ரேஷ்ட்டரான முகுந்தாசார்யனை
வணங்குகிறேன்.
सन्तानसन्ततिश्चायमनसूयासुतस्तथा ।
आचार्यौ पितरौ यस्य स्तोत्रसंगीतधीप्रदौ ॥ ३ ॥
He is the son of
Sri Santhanam Swami and Smt Anasuya devi. Both of his parents were acharyas to
him who taught stotras (and divya prabandham) and Carnatic music respectively.
பெற்றோரான திரு
சந்தானம் ஸ்வாமியும், திருமதி அனசூயா தேவியும், இவருக்கு முறையே நாவலரும்-தென்வடமொழி-நற்பொருளும், ஸங்கீத-ஶாஸ்த்ரமும்
கற்பித்த குருக்களும் ஆவர்.
विरागी राजगोपालः नीतोञ्छवृत्तिजीवनः ।
दिव्यप्रबन्धसूक्तीनामधिकारी पितामहः ।। ४ ॥
सुधीः सम्पत्कुमाराख्यः मातामहश्च वेदवित् ।
सन्ततं सत्कुले जातं मुकुन्दाचार्यमाश्रये
॥ ५ ॥
I salute Sri
Mukundacharya always who was born in an excellent family. His paternal
grandfather was Sri Rajagopalachari, an Adhikari of the Divya prabandham, who led
his life on unchavrtti dispassionately. His maternal grandfather was Sri
Sampath Kumaracharya, a Vedic scholar.
பிதாமஹர்
ஸ்ரீமான் இராஜகோபாலாச்சார்யர், வைராக்யஶீலராய்
உஞ்சவ்ருத்தியில் ஜீவனம் நடத்தியவர். சந்தமிகு தமிழ்மறையில் தேறிய மாஞானமுடையவர். மாதாமஹர்
ஸ்ரீமான் சம்பத்குமாராசார்யர் வேதமறிந்த பகவர். இங்ஙனே
வழிவழியாட்செய்யும் குலத்தில் பிறந்த முகுந்தாசார்யனை வணங்குகிறேன்.
समाश्रयणसंस्कार: पितामहस्य सन्निधौ
।
मालोलस्य नृसिंहस्य भरन्यास: समापित:
।। ६ ॥
He underwent the
samashrayana samskara at the holy feet of his paternal grandfather and
bharanyasa samskara at the holy feet of H.H.45th Jeer of Ahobila
mutt Sri Narayana Yatindra Mahadesikan, in the presence of Sri Malola.
இவர்
பிதாமஹருடைய திருவடியில் பஞ்ச ஸம்ஸ்காரமும், 45ம் பட்டம் அழகியசிங்கர்
ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹாதேஸிகனை முன்னிட்டு மாலோலன் திருவடியில் ஶரணாகதியும் அனுஷ்ட்டிக்கப் பெற்றவர்.
राजते रमया देव्या धर्मपत्न्या यया ह्ययम् ।
दम्पती च कलावेतौ विस्मयजनकौ भजे ।। ७ ॥
He shines with his
dharmapatni Smt.Rama. I salute that dampati who are a source of surprise (in
others that such people could still exist) in this age of kali.
ஸ்ரீமதி
ரமாதேவி எனும் தர்மபத்னியுடன் திகழ்பவர். "திரியும் கலியுகம்
நீங்கியதோ!" என்று கண்டவர் வியக்கும்படி விளங்கும் இந்த தம்பதியைத் துதிக்கிறேன்.
भाग्यनगरभाग्यं तं भोगवर्जितजीवनम् ।
रागद्वेषविनाभूतं शिष्यकोटियुतं भजे
।। ८
॥
I salute Sri Mukundacharya who is
indeed a fortune for Bhagyanagara (Secunderabad) who is without raga and dvesha
and who leads a life devoid of comforts with scores of sishyas.
"பாக்யநகரம் செய்தது பாக்யமே" என்னும்படியும், விருப்பு
வெறுப்பின்றியும், போகங்களை விலக்கியும், சீடர்கள் பலர் உடையவராயும் விளங்கும் முகுந்தாசார்யனைப் போற்றுகிறேன்.
आयतनं विना यत्नं विनयस्य यदाकृति: ।
जनानां दासभूतानां वृत्तं यस्य च
लक्षणम् ।। ९ ॥
He is modesty
personified, infact his modesty is very natural. His conduct is an example for
other bhagavatas.
தன்னடக்கமே
வடிவானவர். இத்தன்மையும் இவருக்கு இயல்பாகவே அமைந்தது. இவரது நன்நடத்தை அடியார்கள்
குழாங்களுக்கு ஏற்றதொரு எடுத்துக்காட்டாகும்.
प्रणतार्तिहराख्येन स्वामिना तां प्रवर्तिताम् ।
स्तोत्रपाठस्य सङ्गोष्ठीं प्रवर्धितवते नमः ॥ १० ॥
I salute Sri Mukundacharya who has
dedicatedly led the stotrapatha ghoshti and has grown it much large in size,
which was started by Sri Pranatartiharan Swami way back in the 1990’s.
ஸ்ரீ
ப்ரணதார்த்திஹரன் என்னும் மஹனீயரால் 1990ம் ஆண்டளவிலே
தொடங்கப்பெற்ற 'ஸ்தோத்ரபாடகோஷ்டி'யை,
ஆழ்ந்த ஈடுபாடுடன் தொடர்ந்து நடத்தியும் விரிவுபடுத்தியும் வருகிற
முகுந்தாசார்யனுக்கு வந்தனம்.
प्रतिवर्षसमावास: गुरुणानेन कल्पित:
।
येन च बालिका बाला: जाता:
श्रीवैष्णवा: किल ।। ११ ॥
Summer camps are conducted by this Guru
every year in which young boys and girls get to become Srivaishnavas indeed!
ஆண்டுதோறும்
இவரால் நடத்தப்படும் கோடை முகாங்களில் பங்கேற்று அநேக சிறுவர் சிறுமியர்
ஸ்ரீவைஷ்ணவர்களாக சித்திக்கிறார்கள் என்பதில் மிகையில்லை.
आकारादिविशेषास्तु भागवतेष्वशेषत: ।
यस्य वै नैव भासन्ते तं वन्देहं
विशेषत: ।। १२ ॥
I salute Sri Mukundacharya to whom the
qualities like appearance etc do not matter at all in the bhagavatas! (All are
equally respected and treated)
ஏழை ஏதலன்
கீழ்மகன் என்னாது (தோற்றங்களைப் பொருட்படுத்தாமல்), அனைத்து அடியார்களையும் ஒரேவகையில் நோக்கும் முகுந்தாசார்யனை, விஶேஷமாக வந்தனம் செய்கிறேன்.
सञ्चरन् दिव्यदेशेषु दर्शनं न:
प्रचारयन् ।
साधुसमागमे चैवं रममाणं सदा भजे ।। १३ ॥
I salute Sri
Mukundacharya always who is always on a tour to divyadesams, doing prachara of
our darshana and who revels in the company of bhagavatas.
திவ்யதேஶங்களில் சஞ்சாரம் செய்தும், நமது தர்ஸனத்தை ப்ரசாரம்
செய்தும், கேசவன் தமருடன் கூடியிருந்து குளிர்ந்தும் வருகிற முகுந்தாசார்யனை
எப்போதும் போற்றுகிறேன்.
मालोलप्रियभूतोयं तस्यानुभूतिगोचर: ।
कृतान्तरङ्गकैंकर्य: नानायतिपदेष्वपि ।। १४ ॥
He is indeed very much devoted to Sri
Malolan and always after his anubhava. He has performed antaranga kainkarya to
various yatis.
மாலோலனுக்கு
மாலாகி அவ்வனுபவத்திலே ஆழங்கால் படுவர். யதிவரர்கள் பலரால் கூவிப்பணிகொள்ளும்படி
நற்பேறு பெற்றவர்.
बहुभाषाप्रवीणाय मृदुभाषाप्रयोगिने ।
पूर्वभाषाप्रदानाय नमो घोषोस्तु मे
सदा ।। १५ ॥
My salutations to Him always who speaks
many languages, soft spoken and does not hesitate to speak first!
பலமொழி
வல்லுனரும், மென்மொழி பேசுபவரும், முன்னே பேச
முன்வருபவருமாகிற இவருக்கு என் நமஸ்காரம்.
पौण्डरीकपुराभिख्याश्रमाचार्यपुरन्दरै:
।
देशिकस्तोत्ररत्नाख्य: प्रदत्तो
बिरुदोपि यम् ।। १६ ॥
अलंकरोति तं वन्दे परकालमठाधिपै: ।
देशिकस्य प्रचारस्य वाङ्मयस्य
धुरन्धर: ।। १७ ॥
I salute Sri
Mukundacharya who is decorated by the two titles namely ‘Desika stotra ratna’
conferred by Sri Paundarikapuram Andavan Swami and ‘Desika prachara vanmaya
dhurandhara’ conferred by Sri Parakala mutt Jeer.
பௌண்டரீகபுரம்
ஆசார்யனால் 'தேஶிகஸ்தோத்ர-ரத்னர்' என்றும் பரகாலமடாதிபதியால் 'தேஶிகப்ரசார-வாங்மய-துரந்தரர்' என்றும் பிருதங்களைப்
பெற்ற முகுந்தாசார்யனை வணங்குகிறேன்.
सर्वेषु यतिवर्येषु
यतीन्द्रपथिवर्तिषु ।
शिष्यभावेन संप्राप्त: समाद्रितश्च
तैरपि ।। १८ ॥
He is indeed
equally devoted as a sishya to all Srivaishnava jeers (irrespective of internal
differences like kalai etc) and he is held in high esteem by all of them.
யதிராஜரின்
வழிவரும் எல்லா யதிவரர்களிடமும் ஏற்றதாழ்வற்ற தாஸ்யபாவத்தை உடையவர். அவர்கள்
அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்படுபவர்.
यत्स्तोत्रपाठसंगोष्ठात् स्वल्पैवकाललालित: ।
वत्स एषोपि संभूत: तस्यैव
स्तोत्रगोयुत: ।। १९ ॥
This calf, that I am, which was nourished
for a very brief time in the cowpen (stotra patha ghoshti of Sri E.S.Mukundan)
has become endowed with ‘go’ or speech to write a stotra on him!
இவருடைய ஸ்தோத்திரபாடகோஷ்டியில் குறைந்தகாலமே ஊட்டம் பெற்ற இக்கன்று (அடியேன்), இவரைப்பற்றியே ஸ்தோத்திரம் செய்யும் வாக்கைப் (பாக்கியத்தைப்)
பெற்றது.
विख्यातिलाभपूजासु विमुखे वैष्णवे
जने ।
सम्मुखोस्मिन् जनोयं स्यात्
शिष्यत्वमत्यजन्नपि ।। २० ॥
Let this person (myself), without ever
leaving his sishyatva, be always oriented towards this acharya Sri Mukunda, who
is never oriented towards fame, money and favours.
புகழ்,பொருள்,பாராட்டு இவைகளில் விமுகரான
முகுந்தாசார்யனிடம், இவ்வடியேன் எப்பவும் சிஷ்யபாவத்தை
விடாமல் ஸம்முகம் (நோக்கம்) கொள்ள
வேணும்.
शतं जीयात् सदाचार्यः सम्प्रदायं प्रवर्धयन् ।
संप्रार्थये च मालोलं सन्मार्गं नः प्रदर्शयन् ॥ २१ ॥
I pray to Sri Malola for a long life of
Sri Mukundacharya to keep spreading the tenets of our sampradaya and showing us
the right path.
ஸம்ப்ரதாயத்தை
வளர்த்தவண்ணம், நமக்கும் நல்வழிகாட்டிக் கொண்டு, நம் முகுந்தாசார்யன்
பல்லாண்டு எழுந்தருளியிருக்க வேணும்' என்று மாலோலனை
வேண்டுகிறேன்.
मुकुन्दमालिकां चेमां यः कोपि श्रुणुयात्
पठेत् ।
तच्चरित्रमहत्त्वेन श्रीवैष्णवत्वमाप्नुयात् ॥
२२ ॥
Whoever reads or listens to this stuti
Mukundamalika, shall attain the qualities of a Srivaishnava by the greatness of
Sri Mukundacharya’s disposition indeed.
"முகுந்தமாலிகா" என்னும் இத்துதியை வாசித்தும் கேட்டும், வருபவர்க்கு ‘நம்முகுந்தாசார்யனுடைய சரித்திர
வைபவத்தால் ஸ்ரீவைஷ்ணவத்தன்மை சித்திக்கும்’ என்பது
திண்ணம்.
नकुलस्य सुघोषे श्रीरामविरचिता स्तुतिः
श्रीमुकुन्दमालिका समाप्ता ।
Here ends the stuti Sri Mukunda
Malika, a part of Nakulasya Sughosha, composed by Dr.Sreeram Jaganathan.
இத்துடன்
நகுலனடைய ஸுகோஷம் என்கிற கவிதைத்தொகுப்பில் ஶ்ரீராமன் எழுதிய ஶ்ரீமுகுந்தமாலிகை என்னும்
ஸ்துதி நிறைவுபெறுகிறது
॥ शुभं भूयात् ॥
Dasan, Dr.Sreeram Jaganathan, www.sreeramanuja.org
Comments
Post a Comment