श्रीवेदान्तदेशिकस्तोत्रपञ्चरत्नम् – தமிழ் மூலமும் பொருளும்




श्रीवेदान्तदेशिकस्तोत्रपञ्चरत्नम्

ஶ்ரீவேதாந்ததேசிகஸ்தோத்ரபஞ்சரத்னம் -தமிழ் மூலமும் பொருளும்

ஶ்ரீநிகமாந்தமஹாதேஶிகன் அருளிச்செய்த இருபத்து எட்டு

 ஸ்தோத்திரபாடங்களின் பெயர்களை தெரிவிக்கும் வகையாக இந்த ஸ்துதி 

அடியேனால் இயற்றப்பட்டுள்ளது.


स्तवं हयाननस्य वै दशावतारसंस्तुतिं

समाधियोगकारिकामभीतये तथा स्तवम् ।

परश्शतं दयाकृते द्विपाद्रिराच्छतार्धकम्

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ १ ॥

ஸ்தவம் ஹயானனஸ்ய வை த3ஶாவதாரஸம்ஸ்துதிம்

ஸமாதி4யோக3காரிகாம் அபீ4தயே ததா2 ஸ்தவம்

பரஶ்ஶதம் 3யாக்ருதே த்3விபாத்3ரிராச்ச2தார்த4கம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 4ஜே ஹி தத்பத3ம் 1

பொருள்: எந்த ஆசாரியர் (: தே3ஶிக:) ஹயக்ரீவஸ்தோத்திரத்தையும் (ஹயானஸ்ய ஸ்தவம்ஹயகுதிரை, ஆநம் - முகம்) தஶாவதாரஸ்தோத்திரத்தையும் (3ஶாவதாரஸம்ஸ்துதிம்), பகவத்த்யாந ஸோபானத்தையும் (ஸமாதி4யோக3காரிகாம்பகவானை த்யானம் செய்யும் முறையை கற்பிக்கும் ஸ்துதி), அபீதிஸ்தவத்தையும் (அபீ4தயே ததா2 ஸ்தவம்அபீதயேபயம் நீங்குவதற்காக) தயாஶதகமும் (பரஶ்ஶதம் 3யாக்ருதே - தயையைமுன்னிட்டு நூற்றுக்கும் அதிகமான ஸ்துதி), வரதராஜபஞ்சாஶத்தையும் (த்3விபாத்3ரிராச்ச2தார்த4கம்த்விபயானை, அத்ரிமலை, ராட்ராஜா அல்லது பொலிந்துவிளங்கும், ஶதார்தகம்நூற்றில் பாதிபஞ்சாஶத்) அருளிச்செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (4ஜே ஹி தத்பத3ம்). ।। 1 ।।

विरागभावपञ्चकं प्रपत्तिमार्गदीपिकां

यथोक्तकारिसंस्कृतिं गजेन्द्रमोक्षदस्तुतिम् ।

यथेष्टवासिगीतिकां स्तुतिं च पारमार्थिकां

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ २ ॥

விராக3பா4வபஞ்சகம் ப்ரபத்திமார்க3தீ3பிகாம்

யதோ2க்தகாரிஸம்ஸ்க்ருதிம் க3ஜேந்த்3ரமோக்ஷத3ஸ்துதிம்

யதே2ஷ்டவாஸிகீ3திகாம் ஸ்துதிம் ச பாரமார்தி2காம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 4ஜே ஹி தத்பத3ம் 2

பொருள்:   எந்த ஆசாரியர் (: தே3ஶிக:) வைராக்ய பஞ்சகத்தையும் (விராக3பா4வபஞ்சகம்விராக3த்தினுடைய பா4வம் - வைராக்யம்), ஶரணாகதிதீபிகையையும் (ப்ரபத்திமார்க3தீ3பிகாம் - ப்ரபத்தி மார்கம் - ஶரணாகதி), வேகாஸேதுஸ்தோத்திரத்தையும் (யதோ2க்தகாரிஸம்ஸ்க்ருதிம்யதோக்தகாரிசொன்ன வண்ணம்செய்தபெருமாள்வேகாஸேது எம்பெருமான்), அஷ்டபுஜாஷ்டகத்தையும் (3ஜேந்த்3ரமோக்ஷத3ஸ்துதிம்கஜேந்திரனுக்கு மோக்ஷம் அருள எட்டு திருக்கரங்களைக்கொண்ட எம்பெருமானைப் பற்றிய ஸ்துதி), காமாஸிகாஷ்டகமும் (யதே2ஷ்டவாஸிகீ3திகாம் - யதே2ஷ்டவாஸிகாமாஸிகாவேளிருக்கை, கீ3திகாம்ஸ்துதியை) பரமார்த்தஸ்துதியையும் (ஸ்துதிம் ச பாரமார்தி2காம்) அருளிச்செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (4ஜே ஹி தத்பத3ம்). ।। 2 ।।

सुराधिपाय चार्धकं शतं तथाच्युताय वै

असंस्कृते सुसंस्कृतं स्तवं यथेष्टसिद्धये ।

स्तुतिं च गद्यरूपिकां महाकुटुम्बिवैभवम्

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ ३ ॥

ஸுராதி4பாய சார்த4கம் ஶதம் ததா2ச்யுதாய வை

அஸம்ஸ்க்ருதே ஸுஸம்ஸ்க்ருதம் ஸ்தவம் யதே2ஷ்டஸித்34யே

ஸ்துதிம் 3த்யரூபிகாம் மஹாகுடு1ம்பி3வைப4வம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 4ஜே ஹி தத்பத3ம் 3

பொருள்:   எந்த ஆசாரியர் (: தே3ஶிக:) தேவநாயகபஞ்சாசத்தையும், (ஸுராதி4பாய சார்த4கம் ஶதம் - ஸுராதி4பாயதேவநாயகனுக்கு அர்த4கம் ஶதம்பஞ்சாசத்), அச்யுதஶதகத்தையும் (ததா2ச்யுதாய வை அப்படியே அச்யுதனுக்கு, அஸம்ஸ்க்ருதே ப்ராக்ருத பாஷையில், ஸுஸம்ஸ்க்ருதம் ஸ்தவம்மிக அற்புதமான ஸ்துதியை, யதே2ஷ்டஸித்34யேவேண்டின பலனை அடைய), மஹாவீர வைபவத்தையும் (ஸ்துதிம் 3த்யரூபிகாம்உரைநடையில், மஹாகுடு1ம்பி3வைப4வம்ராமாயக்ருஹமேதிநே என்று பலஸ்துதியில் ஸ்வாமி சாதித்தாற்போல், பெரியகுடும்பஸ்தனான ராமனுடைய வைபவத்தை) அருளிச்செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (4ஜே ஹி தத்பத3ம்). ।। 3 ।।

अहीरविंशतिं स्तुतिं सदेहलीशसंस्तुतिम्

श्रियस्स्तुतिं भुवस्तथा पुनस्तदंशवन्दिकाम् ।

प्रपत्तिविस्तृतिस्तुतिं त्रिधा सुदर्शनाष्टकम्

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ ४ ॥

அஹீரவிம்ஶதிம் ஸ்துதிம் ஸதே3ஹளீஶஸம்ஸ்துதிம்

ஶ்ரியஸ்ஸ்துதிம் பு4வஸ்ததா2 புநஸ்த3ம்ஶவந்தி3காம்

ப்ரபத்திவிஸ்த்ருதிஸ்துதிம் த்ரிதா4 ஸுத3ர்ஶனாஷ்டகம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 4ஜே ஹி தத்பத3ம் 4

பொருள்:   எந்த ஆசாரியர் (: தே3ஶிக:) கோபாலவிம்ஶதியை (அஹீரவிம்ஶதிம் ஸ்துதிம்அஹீர - கோபால), தேஹளீஶ ஸ்துதியையும் (ஸதே3ஹளீஶஸம்ஸ்துதிம்), ஶ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதாஸ்துதிகளையும் (ஶ்ரியஸ் - ஶ்ரீயினுடைய, ஸ்துதிம் பு4வஸ்பூதேவினுடைய, ததா2அப்படியே, புநஸ்மறுபடியும், 3ம்ஶ - அவளுடைய அம்ஶமான கோதாவினுடைய - வந்தி3காம் - ஸ்துதியை), ந்யாஸதஶகம், ந்யாஸவிம்ஶதி மற்றும் ந்யாஸதிலகம் என்கிற மூன்று ஸ்துதிகளையும் (ப்ரபத்திவிஸ்த்ருதிஸ்துதிம் த்ரிதா4ப்ரபத்திசரணாகதிஅதைப்பற்றி விஸ்தாரமாக மூன்று ஸ்துதிகளில் சாதித்துள்ளார்), ஸுத3ர்ஶனாஷ்டகத்தையும் (ஸுத3ர்ஶனாஷ்டகம்) அருளிச்செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (4ஜே ஹி தத்பத3ம்). ।। 4 ।।

सुदर्शनस्य षोडशायुधस्तुतिं महौषधिम्

गरुत्मतश्च दण्डकं शतार्धकं स्तवं तथा ।

यतीन्द्रगीतिसप्ततिं गुरौ सुभक्तिदर्शिकाम्

चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ ५ ॥

ஸுத3ர்ஶனஸ்ய ஷோட3ஶாயுத4ஸ்துதிம் மஹௌஷதி4ம்

கருத்மதஶ்ச த3ண்ட3கம் ஶதார்த4கம் ஸ்தவம் ததா2

யதீந்த்3ரகீ3திஸப்ததிம் கு3ரௌ ஸுப4க்தித3ர்ஶிகாம்

சகார யஸ்ஸ தே3ஶிகஸ்ஸதா3 4ஜே ஹி தத்பத3ம் 5


பொருள்:   எந்த ஆசாரியர் (: தே3ஶிக:) ஷோடஶாயுத ஸ்தோத்திரத்தை (ஸுத3ர்ஶனஸ்ய ஷோட3ஶாயுத4ஸ்துதிம் மஹௌஷதி4ம்சக்கரத்தாழ்வாருடைய பதினாறு ஆயுதங்களைப் பற்றிய நோய்களுக்கு மேலான மருந்தான ஸ்துதியை) கருட தண்டகத்தையும், கருடபஞ்சாஶத்தையும் (கருத்மதஶ்ச த3ண்ட3கம் ஶதார்த4கம் ஸ்தவம் ததா2 - கருத்மதஶ்சகருடனைப் பற்றிய தண்டகமும்,  ஶதார்த4கம் - ஶதம்நூறு, அர்த4கம்பாதிபஞ்சாசத், ஐம்பது), யதிராஜஸப்ததியையும் (யதீந்த்3ரகீ3திஸப்ததிம் யதீந்த்3யதிராஜ, கீ3திஸ்துதி, கு3ரௌ ஸுப4க்தித3ர்ஶிகாம்குருவினிடத்தில் சீரிய பக்தியை எடுத்துக்காட்டும்), அருளிச் செய்தாரோ (சகார) எப்பொழுதும் (ஸதா3) அவருடைய திருவடியை வணங்குகிறேன் (4ஜே ஹி தத்பத3ம்). ।। 5 ।।

नकुलेन विधेयेन मुकुन्दपद्मनाभयोः ।

सर्वतन्त्रस्वतन्त्राय स्तुतिरियं समर्पिता ॥

நகுலேன விதே4யேந முகுந்த3பத்மநாப4யோ:

ஸர்வதந்த்ரஸ்வதந்த்ராய ஸ்துதிரியம் ஸமர்பிதா

பொருள்: நகுலனாலஂ (நகுலேன) தாஸனால் (விதே4யேந) முகுந்தன் மற்றும் பத்மநாபன் என்னும் குருமார்களுடைய (முகுந்த3பத்மநாப4யோ:) நிகமாந்த மஹாதேஶிகனுக்கு (ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய) ஶ்ரீவேதாந்ததேசிக ஸ்தோத்ர பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்துதி (ஸ்துதிரியம்) ஸமர்ப்பிக்கப்பட்டது (ஸமர்பிதா)

நகுலன் (எ) முகுந்தபத்மநாபதாஸன்


ஶுபம் பூயாத்


Comments

Popular posts from this blog

My humble pranams in the form of verses in Sanskrit, to Dr.S.Padmanabhan, my Guru, on his Sashtyabdapurti , 60th birthday on 24-09-2017

नकुलस्य सुघोषे श्रीरामविरचिता स्तुतिः श्रीमुकुन्दमालिका

श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलिः